search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் அய்யப்பன் விளக்கு பூஜை வழிபாடு
    X

    ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் அய்யப்பன் விளக்கு பூஜை வழிபாடு

    • வாழைமரத்தால் ஆன 18 படிகள் உள்ளிட்ட அழகிய தோரணங்களுடன் அய்யப்பன் சன்னதி உருவாக்கப்பட்டிருந்தது.
    • செண்டைமேளம் முழங்க நடந்த இந்த விழா கேரள பாரம்பரிய முறைப்படி நடந்தது.

    உடுமலை :

    உடுமலை தில்லை நகரில் ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீஅய்யப்பன் சன்னதி உள்ளது. இங்கு கேரள பாரம்பரிய முறைப்படி ஸ்ரீஅய்யப்பன் விளக்கு மஹோத்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முழுவதும் வாழைமரத்தால் ஆன 18 படிகள் உள்ளிட்ட அழகிய தோரணங்களுடன் அய்யப்பன் சன்னதி உருவாக்கப்பட்டிருந்தது.

    விழாவையொட்டி காலை 6 மணிக்கு கணபதிஹோமம், 7.30 மணிக்கு வாழைமரத்தால் உருவாக்கிய அம்பலத்தில், அய்யப்பசாமி பிரதிஷ்டை, மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை நடந்தது. மாலையில் உடுமலை ருத்ரப்பாநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் இருந்து தாளப்பொலிவுடன் பாலக்கொம்பு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. செண்டை மேளம் முழங்க நடந்த இந்த நிகழ்ச்சியில் இரண்டு புறமும் பெண்கள் விளக்கு ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீதர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் அய்யப்ப பஜனையும் நடந்தது. இரவு பாலக்காடு கடுக்கன்குளம் உன்னிகிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நிகழ்ச்சியும், பின்னர் ஸ்ரீஅய்யப்பன் சரித்திரம் உடுக்கை பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. செண்டைமேளம் முழங்க நடந்த இந்த விழா கேரள பாரம்பரிய முறைப்படி நடந்தது. நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×