search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி
    X

    மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

    • மின் கம்பியில் இரும்பு கம்பி உரசியதால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த பொன்னப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 46). கட்டிட மேஸ்திரி. நேற்று காலை ஆம்பூர் முககொல்லை பகுதியில் நடந்து வரும் கட்டிடப் பணிக்கு சென்றார்.

    அங்கு சகதொழிலாளர்களுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தரைத்தளத்தில் இருந்து இரும்பு கம்பியை மேல் கட்டிடத்திற்கு எடுத்து செல்ல முயன்றபோது அருகில் இருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது இரும்பு கம்பி உரசியது.

    இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நீலகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீலகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×