என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணி தடுத்து நிறுத்தம்
    X

    ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணி தடுத்து நிறுத்தம்

    • புதியதாக கட்டப்பட்டு வரும் இடத்தை வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்
    • அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்தும் ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து பணிகள் செய்து கொண்டு இருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட சோமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற புதியதாக அலுவலகம் சோமநா யக்கன்பட்டி ரெயில்வே கேட் அருகே கட்டப்படுகிறது. வருவாய் அலுவலர் வளர்மதி புதியதாக கட்டப்பட்டு வரும் இடத்தை ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த இடம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சம்மந்தப்பட்ட இடம் மேலும் அந்த இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டு தற்போது பொது இடமாக உள்ளது என தெரிவித்தார். அங்கு புதிய அலுவலகம் கட்ட கூடாது என தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட பணிகள் செய்யக்கூடாது நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்தனர் ஆனால் ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து பணிகள் செய்து கொண்டு இருந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் அருணா மற்றும் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கட்டிட பணிகளை தடுத்து நிறுத்தினர்.

    Next Story
    ×