search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனநலம் பாதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண், கணவரிடம் ஒப்படைப்பு
    X

    மனநலம் பாதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண், கணவரிடம் ஒப்படைப்பு

    • மனநல ஆலோசனை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப் பட்டு வந்தது
    • கலெக்டர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்

    திருப்பத்தூர்:

    பீகார் மாநிலம் சுயா மாவட்டம், பெலகன்ஜ் தாலுகா, பெல் லாடி அடுத்த சங்கர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் விஸ்வகர்மா. இவரது மனைவி காயத்ரிதேவி (வயது 44). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென காணாமல்போய்விட்டார். பலஇடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணை பொது மக்கள் மீட்டு, திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் பெண்கள் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஊர், பெயர் சொல்லத் தெரியாதநிலையில் இருந்த அவருக்கு மருந்து, மாத்திரைகள், மனநல ஆலோசனை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப் பட்டு வந்தது.

    பின்னர் பீகாரில் உள்ள சங்கர்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காயத்ரி தேவியின் இருப்பிடத்தை கண்டறிய நடவடிக்கை எடுத்து அதன் விளைவாக காயத்ரி தேவியின் கணவர் விஸ்வநாத் விஸ்வகர்மா, மகன் சத்யாகுமார், சகோதரர் முகேஷ், மைத்துனர் மொகல் ரிங்கிதேவி, தம்பி பிண்டுவின் மனைவி ரஞ்சுதேவி ஆகியோர் மறுவாழ்வு இல்லத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டனர்.

    அங்கு காயத்ரிதேவியை நேரில் கண்டதும் அவரது கணவர் மற்றும் மகன் ஆனந்த கண்ணீர் வீட்டு கட்டி தழுவினர்.

    அதைத்தொடர்ந்து அந்தப்பெண்ணை கலெக்டர் அலுவல கத்தில் அவரது உறவினர்களிடம் கலெக்டர் பாஸ்கரபாண் டியன் ஒப்படைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும், மருத்துவரிடம் காண்பித்து, மருத்துவரின் ஆலோசனையின் படி நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூறினார். மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, உதவும் உள்ளங்கள் மனநல காப்பக நிர்வாகிரமேஷ் மற்றும் சமூகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×