என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பைக் மீது லாரி மோதி பைனான்சியர் பலி
  X

  பைக் மீது லாரி மோதி பைனான்சியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒருவர் படுகாயம்
  • போலீசார் விசாரணை

  ஆம்பூர்:

  கரூர் மாவட்டம் கா.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 36). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்துக்கு வந்த இவர் ஆம்பூருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

  அதேபோல் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தச்சுத்தொழிலாளியான நேருவும் (50) மற்றொரு பைக்கில் ஆம்பூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தேவலாபுரம் பகுதியில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, துத்திப்பட்டு பஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென இவர்களது மோட் டார் சைக்கிள்கள் மீது மோதியது.

  இதில் மணிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேரு, படுகாயத்துடன் துடிதுடித்தார்.

  சம்பவ இடத் துக்கு போலீசார் விரைந்து வந்து நேருவை மீட்டு சிகிச்சைக் காக அனுப்பிவைத்தனர். பின்னர் மணிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இது தொடர்பாக லாரியை ஓட்டி வந்த வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முருகேசனை (45) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×