என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

தேர்வில் தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது

- மாணவர்களுக்கு கலெக்டர் ஆலோசனை
- காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்
திருப்பத்துார்:
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்நேற்று வெளியானது. திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதன்படி மாவட் டத்தில் 13 ஆயிரத்து 14 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் மாணவர்களில் 5 ஆயிரத்து 576 பேரும். மாணவிகளில் 6 ஆயிரத்து 284 பேர் என மொத்தம் 11 ஆயிரத்து 860 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு முடிவு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம். 86.81 சதவீதம், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.34 ஆகும்.
மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம் 91.13 ஆகும் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெற்ற தேர்ச்சி விகிதம் 90.05 என்பது குறிப்பி டத்தக்கது. மேலும் தமிழக அளவில் கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் 34-வது இடத்தில் இருந்தது.
இந்த ஆண்டு 29-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு இடையே தேர்ச்சி விகிதத்தைப் கணக்கிடும் போது திருப்பத்தூர் மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறியதாவது:-
மாவட்டத்ததில் 55 அரசுப் பள்ளிளும், 78 தனியார் பள்ளிகள் என மொத்தம் 133 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 45 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தோல்வியடையும் மாணவர்கள், அடுத்த முயற்சிக்கு செல்ல வேண்டும். ஏனெனில் இந்த உலகில் தோல்வி யடைந்தவர்கள்தான் சரித்திரம் படைத்துள் ளனர்.
அதனால் யாரும் தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது. கடந்த முறை செய்த முயற்சியை விட சற்று அதிகமாக முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்.
தேர்வு முடிவுகளை வைத்து எந்தெந்தப் பள்ளிகளில் அதிகம் பேர் தேர்ச்சியடையவில்லை.
என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் அங்கு காணப்படும் குறைகள் களையப்படும். அந்தப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு முக்கி யத்துவம் அளிக்கப்படும். காலியாக உள்ள ஆசிரியப் பணி யிடங்கள் நிரப்பப்படும் என்றார்.