என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    60 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்தது
    X

    கிணற்றில் பாய்ந்த காரை தீயணைப்பு துறையினர் கிரேன் மூலம் மீட்டனர்.

    60 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்தது

    • கண்ணாடிகளை உடைத்து 3 பேர் உயிர் தப்பினர்
    • 4 மணி நேரம் போராடி கார் மீட்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த கூத் தாண்டகுப்பம் கரியன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நந்த குமார் (வயது 27), ராமச்சந்திரன் (28), சுந்தர் (41). இவர்கள் 3 பேரும் பெங்களூரு பகுதியில் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களது உறவினர் நேற்று முன்தினம் இறந்துவிட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று காலை பெங்களூரு வில் இருந்து சொந்த ஊருக்கு காரில் வந்து பங்கேற்றுவிட்டு பெங்களூரு நோக்கி புறப்பட்டனர்.

    காரை நந்தகுமார் ஓட்டிச் சென்றார். புறப்பட்ட சிறிது நேரத்தில் கூத்தாண்டகுப்பம் கிராம பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்தது.

    அந்த கிணற்றில் 55 அடிக்கு தண்ணீர் இருந்ததால் காரில் இருந்த 3 பேரும் கார் கண்ணாடிகளை உடைத்து கொண்டு வெளியே நீச்சல் அடித்து எந்த வித காயமுமின்றி உயிர் தப்பி கிணற்றில் இருந்து வெளியே வந்தனர்.

    தகவல் அறிந்த கூத்தாண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலை வர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக் கையில் ஈடுபட்டு உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கார் தண்ணீருக்கு அடியில் சென்று விட்டதால் காரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி காரை கிரேன் மூலம் தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.

    Next Story
    ×