என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்
    X

    108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்

    • குரு ஜெயந்தி விழா முன்னிட்டு நடந்தது
    • பக்தர்கள் தலையில் 25 கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்து சமர்ப்பணம் செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் உள்ள ஸ்ரீஸத்ய ஆஷ்ரமத்தில் வருட ந்தோறும் உலக குரு மார்களின் புனித தினமாகவும் உலக குருமார்களை நினைவு கூறும் புனித நாளாகவும் கொண்டாடும் ஸ்ரீஸத்ய குரு ஜெயந்தி தரிசன த்திருவிழா நடைபெற்று வருகிறது.

    இந்த வருடமும் முன்னிட்டு சத்ய வழி பக்தர்களால் ஏலகிரிமலையில் வெகு கோலாகலமாக கொண்டா டப்பட்டது.

    அதை முன்னிட்டு பலவிதமான நிகழ்ச்சிகளும் பூஜைகளும் நடைபெற்றது.பொன்னேரி கூட்டு ரோடு மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு நூற்று கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவே பால் குடம் ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    விழாவில் 108 தட்டுக்களில் குரு சீரை பக்தர்கள் தலையில் 25 கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்து சமர்ப்பணம் செய்தனர்.

    கூடவே அலங்கார வாகனத்தில் கேரள செண்டை மேள வாத்தியங்கள் முழங்க பொன்னேரியிலிருந்து ஆஷ்ரம் பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்றனர்.

    ஏலகிரி மலையில் பக்தர்கள் தங்கள் கைகளால் ஆகாயத்தில் தீபம் ஏற்றி பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பக்தர்கள் ஏற்றி பறக்க விட்ட தீபங்களால் வானமே தீபங்களால் நிறைந்து காணப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு விருந்தினர்களும், பல மாநிலங்களில் இருந்து ஸத்ய பக்தர்களும் திரளாக வருகை தந்து இந்த ஸ்ரீசத்ய ஜெயந்தி தரிசன திருவிழவில் கலந்துகொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஸ்ரீஸத்ய ஆஷ்ரம் சத்ய வழி பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×