search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை தீப திருவிழாவில் அன்னதானம் வழங்க கட்டுப்பாடு
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு காமதேனு கற்பகவிருட்ச வாகனத்திற்கு வண்ணம் தீட்டும் பணி நடைபெற்ற காட்சி.

    திருவண்ணாமலை தீப திருவிழாவில் அன்னதானம் வழங்க கட்டுப்பாடு

    • நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை
    • இன்று முதல் 15-ந் தேதி வரை விண்ணப்பங்களை கொடுத்து அனுமதி பெறலாம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 14 ஆம் தேதி துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

    17-ந் தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    நவம்பர் 23-ந் தேதி தேரோட்டமும், 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் போது அன்னதானம் வழங்க உள்ளவர்கள் www.foscos.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் அல்லது திருவண்ணா மலை செங்கம் சாலையில் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் நவம்பர் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விண்ண ப்பங்களை கொடுத்து அனுமதி பெறலாம்.

    விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி சான்று, ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.

    அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. கிரிவல பக்தர்களுக்கு இடையூறு இல்லா மல் கிரிவலப்பா தையில் இருந்து 100 மீட்டர் உட்புறமாக அன்னதானம் வழங்கலாம்.

    நோய் தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ, அன்னதானம் விநியோகம் செய்யவோ அனுமதிக்க கூடாது. அன்னதானம் செய்ய பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும், கலப்படம் இன்றியும் இருக்க வேண்டும்.

    அன்னதானம் வழங்கும் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. அன்னதானம் வழங்குபவர்கள் உணவு கழிவுகளை குப்பை தொட்டிகள் அமைத்து தாங்களாகவே அகற்ற வேண்டும்.

    அன்னதானம் வழங்கும் போது போதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கூடுதல் விபரங்களுக்கு 044 237416, 90477 49266, 98656 89838 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    Next Story
    ×