என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்று காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் மாடவீதியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பெரிய ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர் வீதி உலா
- ரிஷபம் சிவனின் சின்னமாகவும், தர்ம தேவதையின் வடிவமாகவும் விளங்குகிறது
- இரவு தொடங்கும் மாட வீதியுலா விடிய விடிய நடக்கிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா 5-ம் நாள் உற்சவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.
கடந்த 17-ந் தேதி தொடங்கிய தீபவிழாவின் 5-ம் நாளான இன்று, 100 ஆண்டுகள் பழமை 32 அடி உயர பெரிய ரிஷப வாகனத்தில் அருணாசலேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இந்த ரிஷப வாகனம் நாட்டுக்கோட்டை நகரத் தார் சமூகத்தினரால் உரு வாக்கப்பட்டது. இது போன்ற பெரிய ரிஷப வாகனம் தேவகோட்டை பகுதியில் உள்ளது. விழாக் காலங்களில் அருணாசலே சுவரர் எழுந்தருளும் வாக னங்களில் மிகப்பெரியது இந்த ரிஷப வாகனம்.
இந்த வாகனத்தில் மேல் அமைக்கப்படும் திருக்குடை மிகப்பிரம்மாண்டமானது. ரிஷபம் சிவனின் சின்னமாகவும், தர்ம தேவதையின் வடிவமாகவும் விளங்குகிறது. ரிஷப வாக னத்தின் கால்கள் நான்கும் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களை குறிப்பதாகும்.
வேதரூபமாக ரிஷபம் கருதப்படுகிறது. இதனால் சிவனுக்கு வேதநாயகன் என்று பெயர். ரிஷபத்தில் எழுந்தருளும் சிவபெரு மானை குறிக்கும் வகையில் கிராமப்புறங்களில் 'மாட சாமி' என்று பெயர் வைப் பார்கள். மாடு (ரிஷபம்) ஏறிய சாமி (சிவன்) ஆவர்.
ஆத்மாக்கள் முக்தி அடைய சிவனை வணங்குவதை தான் கோவில்களில் சிவனை நோக்கி ரிஷபங்கள் இருப்பது நமக்கு உணர்த்துகிறது. இது போன்ற சிறப்புகள் வாய்ந்த பிரம்மாண்டமான ரிஷப வாகனத்தில் வேதநாயகனாக அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் இன்று இரவு 10 மணிக்கு மேல் எழுந்தருளுகிறார்.
இரவு தொடங்கும் மாட வீதியுலா விடிய விடிய அதிகாலை வரை நடைபெற உள்ளது.






