என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை
- பழவேற்காடு கூனங்குப்பம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
- மீனவர்கள் ஏராளமானோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர், பழவேற்காடு கூனங்குப்பம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் பழவேற்காடு, நடுவூர் மாதா குப்பம், ஆண்டிக்குப்பம், கோட்டைகுப்பம் ஆகிய பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதில் தொடர்ந்து தகராறு இருந்து வருகிறது.
இதுகுறித்து பலகட்ட பேச்சுவார்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் கூனங்குப்பம் மீனவர்கள் மீன்பிடிதொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கூனங்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சினைக்கு நிரந்த தீர்வுகாணக்கோரி கோரிக்கை விடுத்தனர்.
Next Story






