என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் மாசி தேர்த்திருவிழா - 28ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் மாசி தேர்த்திருவிழா - 28ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உற்சவமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்
    • விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    அவிநாசி :

    கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனரால் தேவாரம் பாடல் பெற்றதுமான, திருமுருகன்பூண்டியில் எழுந்தருளியுள்ள திருமுருகநாத சுவாமி கோவிலில் மாசி தேர்த்திருவிழா 28ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

    வருகிற மார்ச் 1-ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 2ந் தேதி பூத வாகனம், சிம்ம வாகனம், 3ந்தேதி புஷ்ப விமான காட்சியும், 4ந் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சிகளும் நடைபெறுகிறது. விழாவில், 5-ந் தேதி திருக்கல்யாணம், யானை, அன்ன வாகன காட்சிகள் நடக்கிறது. அடுத்த மாதம் 6-ந்தேதி அதிகாலை திருமுருகநாதர், சண்முகநாதர், அம்மன் உட்பட உற்சவமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அன்று மாலை 3 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்கும்.

    தொடர்ந்து 7ந் தேதி மீண்டும் தேரோட்டமும், 8ந்தேதி பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சிகள், தெப்பத் திருவிழாவும் நடைபெறும். தொடர்ந்து 9ந் தேதி தலவரலாற்றை நினைவுகூறும் வகையில் ஸ்ரீ சுந்தரர் வேடுபறி திருவிழா, அணைப்புதூர் அருகிலுள்ள கூப்பிடு விநாயகர் கோவிலிலும், 10ந் தேதி பிரம்ம தாண்டவ தரிசன காட்சியும் நடக்கிறது.தேர்த்திருவிழா நிறைவாக மார்ச் 11-ந்தேதி காலையில் மஞ்சள் நீர் விழா, இரவு மயில் வாகன காட்சிகள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×