என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில் சேவை தொடங்காததால் வெறிச்சோடி காணப்படும் போடி ரெயில் நிலையம்.
அதிகாரிகள் அலட்சியத்தால் தேனி-போடி ரெயில் பாதை பயன்பாட்டிற்கு வருவது தாமதம்
- சென்னை மற்றும் மதுரை ரெயிலை போடி வரை நீட்டித்து இயக்குவதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரெயில்வே துறையால் வெளியிடப்பட்டது.
- அதிகாரிகள் அலட்சியத்தால் ரெயில் இயக்கப்படாததால் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
மதுரை-போடி மீட்டர்கேஜ் ரெயில் அகல ரெயில்பாதை பணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மிகக்குறை வான நிதி ஒதுக்கீடு மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகி வந்தன.
அதனைத் தொடர்ந்து ஒரு வழியாக கடந்த 2022-ம் ஆண்டு தேனி வரை மட்டும் பணிகள் முடிந்தன. சோதனை ஓட்டத்துக்கு பின்னர் கடந்த மே 27ந் தேதி முதல் மதுரை-தேனி வரை ரெயில் சேவை தொடங்கி யது. மேலும் போடி வரையிலான பணிகளும் அடுத்த சில மாதங்களில் முடிந்தது. எனவே சென்னை மற்றும் மதுரை ரெயிலை போடி வரை நீட்டித்து இயக்குவதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரெயில்வே துறையால் வெளியிட ப்பட்டது.
இதனால் போடி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பி னரும் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டத்திலும் இது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எனவே வருகிற 8ந் தேதி பிரதமர் மோடி இந்த நீடிப்பு ரெயிலை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்க ப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நிரலில் இது குறித்து எந்த விபரமும் இடம்பெற வில்லை.
தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் ரெயிலை இயக்காததால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் அலட்சியத்தால் ரெயில் இயக்கப்படாததால் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர். எனவே விரவைில் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என எதிர்பார்த்து உள்ளனர்.






