என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சீசன் தொடங்கியது:  தருமபுரி நகரப் பகுதியில் சீத்தாப்பழம் விற்பனை அமோகம்   கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது
    X

    தருமபுரியில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள சீத்தாப்பழங்கள்.

    சீசன் தொடங்கியது: தருமபுரி நகரப் பகுதியில் சீத்தாப்பழம் விற்பனை அமோகம் கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இவ்வளவு சிறப்பு வாய்ந்த சீதாப்பழம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கையாகவே விளைகிறது.
    • இதை சாப்பிட்ட உடனேயே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்கிறார்கள்.

    தருமபுரி,

    சீதாப்பழம் உடலுக்கு வலிமை கொடுக்க கூடியது. இதயத்துக்கு பலம் கொடுக்கும் . கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்பு, பற்கள் பலமடையும். தசைப்பிடிப்பு இருப்பவர்கள் சீதாப்பழம் எடுத்து கொள்வதன் மூலம் தசைகள் வலிமையடையும். பெண்களுக்கு ஏற்ற கனி இது என்றும் இது கருவுறுதலை மேம்படுத்தும், சோர்வு உணர்வை குறைக்கும். எரிச்சலை குறைக்கும் தன்மைகொண்டது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தகூடியது என்றெல்லாம் இந்த பழத்தை பற்றி கூறுவர்.

    ​நீரிழிவு நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்து வருகிறது. சீத்தாப்பழம் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் நிறைந்திருக்கும் என்பதால் இதை சாப்பிட்ட உடனேயே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்கிறார்கள்.

    ஒரு சிலர் சீத்தாப்பழம் கிளைசெமிக் குறியீடு 54 என்பதால் நீரிழிவு இருப்பவர்களுக்கு நல்ல பழம் என்றும் சொல்கிறார்கள்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த சீதாப்பழம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கையாகவே விளைகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் ‌ பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்ளி மலையில் உள்ள மலையூர் அதனைச் சுற்றியுள்ள மேட்டு கொட்டாய், பாறை கொட்டாய், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் சீதாப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளையும் பழங்கள் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்கும், முக்கியமாக கேரள மாநிலத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் சீதாப்பழம் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது. தருமபுரி சந்தை பேட்டையில் உள்ள மார்க்கெட்டில் மொத்த விலை கிலோ 25 ரூபாய்க்கும், கடைகளில் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×