என் மலர்
உள்ளூர் செய்திகள்

உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் மகாபாரதி மாற்றுத்திறனாளியிடம் வழங்கினார்.
மாற்றுத்திறனாளி வீட்டிற்கே சென்று உதவித்தொகை பெற ஆணை வழங்கிய கலெக்டர்
- உதவித்தொகை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்திருந்தார்.
- ரூ.1500-க்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணையை மாற்றுத்திறனாளியிடம் வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, நல்லாடை கிராமத்தில் வசித்து வரும் கதிரேசன் என்பவரின் மகன் சுமன். இவர் 2 கால்களும் செயல் இழந்தவர் (மாற்றுத்தி றனாளி).
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவித்தொகை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கலெக்டர் மகாபாரதி உட னடியாக மாற்றுத்திறனாளி வீட்டிற்கே சென்று, நலம் விசாரித்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1500-ற்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணையை வழங்கினார்.
அப்போது தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுந்தரி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






