தஞ்சை அருகே நாளை பல்வேறு பகுதிகளில் மின் நிறுத்தம்

வீரமரசன்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சை அருகே நாளை பல்வேறு பகுதிகளில் மின் நிறுத்தம்
Published on

தஞ்சாவூர்:

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சையை அடுத்த வீரமரசன்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

எனவே பூதலூர், செல்லப்பன்பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீர கண்டியம்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனம்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதூரான் புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சமுத்திரம், தொண்டராயன்பட்டி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com