search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம். அருகில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி உள்ளார்.

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    • சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற உள்ள ஆண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்ற உள்ளார்.
    • பூத் கமிட்டி ஆய்வுக்காக தலைமை நிலைய பொறுப்பா ளரை நியமனம் செய்து உள்ளனர்.

    செங்கோட்டை:

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலு வலகத்தில் நடந்தது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க.வின் ஆண்டு விழா தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு மகிழ்ச்சி திருவிழா. 52-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளை என அனைத்து பகுதிகளிலும் உள்ள அ.தி.மு.க. கொடி கம்பத்திற்கும் வண்ணம் பூசி கொடி ஏற்றி பொதுமக்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்க வேண்டும்.

    அதேபோல அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சங்கரன்கோவில் தொகுதி யில் வருகிற 18-ந் தேதி ஜெயலலிதா திடலில் நடைபெற உள்ள ஆண்டு விழாவில் சிறப்புரையாற்ற உள்ளார். அவரை வரவேற்பதற்காக மாவட்டத்தின் 3 தொகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள், இளைஞர், மகளிரணியினர் தயாராக உள்ளனர்.

    அதே போல் சங்கரன் கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் பிரசாதத்து டன் மகளிர் அணி நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கவும், 5 வகையான மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்படும். ஏற்கனவே நாம் செய்து வந்துள்ள பூத் கமிட்டி மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து வரும் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும்.

    பூத் கமிட்டி ஆய்வுக்காக தலைமை நிலைய பொறுப்பா ளரை நியமனம் செய்து உள்ளனர். பொறுப்பாளர் வரும் போது நம்முடைய மாவட்டத்தில் அனைத்து பூத் கமிட்டி பணிகளை முடித்து அவர் ஆய்வுக்காக வைத்திட வேண்டும். சங்கரன்கோவில் தொகுதிக்கு வருகை தரும் தென்காசி தனி மாவட்டம் தந்த எடப்பாடி பழனிசாமிக்கு தென்காசி மாவட்டத்தின் செயல்பாடு, சிறப்புகளை காட்டும் வண்ணம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வி.பி.மூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் சண்முகப்ரியா, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தலைமை நிலைய பேச்சாளர் தீக்கணல் லெட்சுமணன், அமுதா பாலசுப்பிரமணியன், சந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×