என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டில் இளைஞர்கள் போட்டிபோட்டு கஞ்சா விற்பனை
    X

    கோப்பு படம்

    செங்கல்பட்டில் இளைஞர்கள் போட்டிபோட்டு கஞ்சா விற்பனை

    • கஞ்சா விற்பனை போட்டியில் ஒருவர் குண்டுவீசி கொலை செய்யப்பட்டார்.
    • வேலைக்கு சென்று வீடு திரும்புபவர்களும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் 6 மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை போட்டியில் ஒருவர் குண்டுவீசி கொலை செய்யப்பட்டார்.

    மற்றொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் செங்கல்பட்டு பெரிய நத்தம் நாகத்தம்மன் கோவில் தெரு, சுடுகாட்டு தெரு, தூக்குமர குட்டை, பச்சையம்மன் கோவில், அனுமந்த புத்தேரி, ராமபாளையம், சின்னகடை மற்றும் ராட்டின கிணறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் இளைஞர்கள் கஞ்சாவை போட்டி போட்டு விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இதனால் கஞ்சா வாங்க வெளியாட்கள் இரவு பகலாக வாகனத்தில் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.

    வேலைக்கு சென்று வீடு திரும்புபவர்களும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இது போன்று கஞ்சா விற்பனையில் இளைஞர்கள் ஈடுபடுவதால் விற்பனை போட்டியில் அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

    இதை வாங்கி குடிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் உடல் நலம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×