என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுவாஞ்சேரி அருகே இளம்பெண்-தொழிலாளி மீது தாக்குதல்
    X

    கூடுவாஞ்சேரி அருகே இளம்பெண்-தொழிலாளி மீது தாக்குதல்

    • கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பார்வதி கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • சந்தேகம் அடைந்த கோவிந்தசாமி அவர்கள் இருவரையும் சரமாரியாக உருட்டுகட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. கொத்தனார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பார்வதி கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கோவிந்தசாமி தனது மனைவியை சந்திப்பதற்காக அங்கு சென்றார். அப்போது பார்வதியும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான பாரதிதாசனும் தனியாக இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தசாமி அவர்கள் இருவரையும் சரமாரியாக உருட்டுகட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பார்வதியும், பாரதிதாசனும் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக கோவிந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×