என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூவத்தூர் அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் மறியல்
    X

    கூவத்தூர் அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் மறியல்

    • பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சாலையை சீரமைக்கக்கோரி இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை காலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    கூவத்தூர் அருகே உள்ளது கானத்தூர் குப்பம். இந்த பகுதிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தனியாக 2கி.மீ. சாலை உள்ளது.

    இந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்த குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும், வாகனங்களும் வருவதில்லை என்று தெரிகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சாலையை சீரமைக்கக்கோரி இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் மறியிலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை காலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×