என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
    X

    பொன்னேரியில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

    • பொன்னேரியை அடுத்த வேண்டாக்கம் தசரத நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன்.
    • பொன்னேரி போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்டாக்கம் தசரத நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். லாரி மெக்கானிக். இவரது மனைவி சாந்தகுமாரி.

    நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாந்தகுமாரி கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அவரது சத்தம் கேட்கவே கணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பிடிக்க முயன்ற போது அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×