என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொத்தவால்சாவடியில் வாலிபர் அடித்து கொலையா? நண்பரிடம் தீவிர விசாரணை
  X

  கொத்தவால்சாவடியில் வாலிபர் அடித்து கொலையா? நண்பரிடம் தீவிர விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொத்தவால்சாவடி ஆத்தியப்ப நாயக்கன் தெருவில் நடைபாதையில் வசித்து வந்தவர் ரவி.
  • ரவி உயிரிழப்பதற்கு முன்பு காக்காதோப்பு பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

  ராயபுரம்:

  கொத்தவால்சாவடி ஆத்தியப்ப நாயக்கன் தெருவில் நடைபாதையில் வசித்து வந்தவர் ரவி. 35 வயதான இவர் நேற்று மாலை தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார்.

  இதுபற்றி தகவல் கிடைத்ததும் பூக்கடை போலீசார் விரைந்து சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  உயிரிழந்த ரவி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாேமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ரவி உயிரிழப்பதற்கு முன்பு காக்காதோப்பு பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். எனவே அவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

  அந்த நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவியின் தலையில் மட்டு மின்றி உடலிலும் சில இடங்களில் ரத்தக்காயங்களும் உள்ளன. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

  பிரேத பரிசோதனையில் தான் ரவி உயிரிழந்தது எப்படி?என்பது தெரிய வரும். எனவே அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

  Next Story
  ×