என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கீழ்கதிர்பூர் சாலை துண்டானது 20 கிராமங்கள் பாதிப்பு
  X

  காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கீழ்கதிர்பூர் சாலை துண்டானது 20 கிராமங்கள் பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பருத்திக்குன்றம் காலணி பகுதியிலுள்ள தரைபாலத்தில் வெள்ளத்தின் காரணமாக வீராணம் பைப்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
  • சாலையும் சேதம் அடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

  காஞ்சிபுரம்:

  கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயலினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பின. மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றான தாமல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வேகவதி ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

  தாமல் கலங்கல் பகுதியில் உருவாகக்கூடிய இந்த வேகவதி ஆறு சுமார் 26கிலோ மீட்டர் வரை பாய்ந்து கீழம்பி, கீழ்கதிர்பூர், திருப்பருத்திகுன்றம், தாயார்குளம், நாகலுத்துமேடு, தாட்டிதோப்பு, ஐயன் பேட்டை வழியாக சென்று திம்மையன்பேட்டை பகுதியில் பாலாற்றில் கலந்து வருகிறது.

  தற்போது வேகவதி ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கீழ்கதிர்பூர் சாலையின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு துண்டானது. இதையடுத்து அப்பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இதனால் குண்டு குளம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர், திருப்பருத்திக்குன்றம், நாட்டேரி, பிரம்மதேசம், புதூர் போன்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்பவர்கள் பல கிலோ சுற்றிசெல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

  இதேபோல் திருப்பருத்திக்குன்றம் காலணி பகுதியிலுள்ள தரைபாலத்தில் வெள்ளத்தின் காரணமாக வீராணம் பைப்கள் பெயர்ந்து காணப்படுகிறது. சாலையும் சேதம் அடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

  ஏற்கனவே வேகவதி ஆற்றின் வெள்ளம் காரணமாக தாயார் குளம் பகுதியில் உள்ள இரண்டு தரைபாலங்கள் சேதம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×