என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேடசந்தூரில் காதல் திருமணம் செய்த கோவை வாலிபர் தற்கொலை
- அரிசி வியாபாரம் செய்து வந்த சரவணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் மன உளைச்சலில் இருந்தார்.
வேடசந்தூர்:
கோவை மாவட்டம் பொருளூர் பகுதியை சேர்ந்தவர் தினகரன் மகன் சரவணன் (வயது37). இவர் ஜெயப்பிரியா என்ற பெண்ணை காதலித்தார்.
இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் நண்பர் உதவியுடன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜிநகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். அரிசி வியாபாரம் செய்து வந்த சரவணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் மன உளைச்சலில் இருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அறிந்ததும் வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






