என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைகுப்புற கவிழ்ந்த வேன்: ஆந்திராவை சேர்ந்த அய்யப்ப பக்தர் பலி- 20 பேர் படுகாயம்
    X

    தலைகுப்புற கவிழ்ந்த வேன்: ஆந்திராவை சேர்ந்த அய்யப்ப பக்தர் பலி- 20 பேர் படுகாயம்

    • டி.எஸ்.பி துர்க்கா தேவி தலைமையிலான போலீசார் சென்று காயமடைந்தவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    ஆந்திரமாநிலம் சத்திசாய் மாவட்டத்தை சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்கள் ஒருவேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனை பிரசாந்த் என்பவர் ஓட்டிவந்தார்.

    இன்று காலை வேன் திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் விருதலைப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர்.

    உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி துர்க்கா தேவி தலைமையிலான போலீசார் சென்று காயமடைந்தவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் சிராமுழுநாயக்(42) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே வேனை ஓட்டிவந்த பிரசாந்த் என்பவர் தப்பிஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×