என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளசரவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    வளசரவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    • தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது.
    • ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போரூர்:

    வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பிரபல தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்திற்கு அதிகாலை 4 மணியளவில் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தின் மேல் பகுதியை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது திடீரென எச்சரிக்கை மணி அடித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்து வளசரவாக்கம் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தப்பி சென்ற மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரியான நேரத்தில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஏ.டி.எம்.மில் இருந்த பல லட்ச ரூபாய் பணம் தப்பியது.

    Next Story
    ×