என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளசரவாக்கத்தில் மது போதை தகராறில் அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு
- அருண் அரிவாளால் பாஸ்கர் மற்றும் முனுசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன்கள் பாஸ்கர், முனுசாமி.
சகோதரர்கள் இருவரும் நேற்று மாலை நண்பர் அருண் என்பவருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றனர். பின்னர் வெளியே வந்தபோது மது போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சகோதரர்கள் இருவரும் சேர்ந்து அருணை சரமாரியாக தாக்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த அருண் அரிவாளால் பாஸ்கர் மற்றும் முனுசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கர், முனுசாமி ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story