என் மலர்
உள்ளூர் செய்திகள்

அக்காள் வீட்டில் நகை திருடிய பெண் கைது
- நாஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 55). இவரது தங்கை ராஜேஸ்வரி.
- உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் நாஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 55). இவரது தங்கை ராஜேஸ்வரி ( 45). காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் ராஜேஸ்வரி, வேளாங்கண்ணி மேரி என்பவருடன் தனது அக்காள் வீட்டுக்கு சென்றார். ராஜேஸ்வரி மற்றும் வேளாங்கண்ணி சாப்பிட்டு விட்டு புறப்பட்டனர். அவர்களின் நடத்தையில் சந்தேகப்பட்ட பச்சையம்மாள் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் 1¼ பவுன் தங்கச்சங்கிலி ஒன்றும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியையும் வேளாங்கண்ணி மேரியையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது நகையை திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்த 6 பவுன் நகையை போலீசார் மீட்டனர். இது சம்பந்தமாக இருவரையும் கைது செய்த உத்திரமேரூர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.






