என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் வியாபாரிக்கு வெட்டு- ரவுடி கைது

- தூத்துக்குடி ராஜீவ் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின்
- பிரதீசை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர் ஜெயக்குமாரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ராஜீவ் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 40). இவர் மெயின் ரோட்டில் பழக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவரது கடைக்கு 2 வாலிபர்கள் வந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே அவர்கள் வாளால் வெட்ட முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓடினார். எனினும் அவர்கள் ஜஸ்டினை வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜஸ்டினை வெட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் அவர்கள் குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாப புரத்தை சேர்ந்த பிரதீஸ் (29), அவரது நண்பர் ஜெயக்குமார் (32) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் தற்போது தூத்துக்குடியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பிரதீசை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர் ஜெயக்குமாரை தேடி வருகின்றனர்.