என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கம் அருகே வியாபாரி தற்கொலை
- சின்மயா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முரளி பாபு
- முரளி பாபுவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முரளி பாபு (வயது 62). கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார்.
இவர் வழக்கம் போல நேற்று மதியம் கடையை மூடிவிட்டு வீடு திரும்பினார். மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் படுக்கையறைக்கு சென்று திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று முரளி பாபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முரளி பாபுவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






