என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி

    • கூவம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • மனோஜ் குமாரும், அவரது தாயார் சாகர் தேவியும், கீழே விழுந்தனர்.அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து டில்லி பாபு என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கவரை தெருவை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி சாகர் தேவி (வயது 41). மகன் மனோஜ் குமார் (19). இவர் தனது தாயார் சாகர் தேவியுடன் பேரம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

    திருவள்ளூர் அடுத்த கூவம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மீண்டும் அந்த டிராக்டர் அந்த மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் இடித்து விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது.

    இதில் நிலைதடுமாறி மனோஜ் குமாரும், அவரது தாயார் சாகர் தேவியும், கீழே விழுந்தனர்.அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து டில்லி பாபு என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

    இதை கண்ட அந்த வழியாக வந்து வாகன ஓட்டிகள் காயம் அடைந்த மனோஜ் குமார் அவரது தாயார் சாகர் தேவி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் மனோஜ் குமார் பரிதாபமாக இறந்து போனார்.

    Next Story
    ×