என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே வேனில் கடத்திய ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்
- விடையூர் கிராம சாலை மடத்துக்குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் வாகன சோதனை செய்தனர்.
- நத்தம் பேடு பகுதியை சேர்ந்த டிரைவர் சந்திரனை கைது செய்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறை இயக்குனர் அபாஷ்குமார் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்ட் கீதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், திருவள்ளூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் அடுத்த விடையூர் கிராம சாலை மடத்துக்குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஆந்திராவுக்கு கொண்டு செல்ல ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. மொத்தம் ஒரு டன் ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து வேன் டிரைவர் திருநின்றவூர் அடுத்த நத்தம் பேடு பகுதியை சேர்ந்த டிரைவர் சந்திரனை கைது செய்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Next Story






