என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 31 பவுன் நகை-ரூ.30 ஆயிரம் கொள்ளை
- திருவள்ளூர் வரதராஜபுரம் ராகவா நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன்.
- திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வரதராஜபுரம் ராகவா நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன். தனியார் தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 13-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இந்த நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 31 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அலெக்ஸ்பாண்டியன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






