என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாலங்காடு அருகே அம்மன் கோவிலில் சிலை-நகைகள் கொள்ளை
    X

    திருவாலங்காடு அருகே அம்மன் கோவிலில் சிலை-நகைகள் கொள்ளை

    • அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை, நகை கொள்ளை போன சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • திருவாலங்காடு போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த பழையனூர் கிராமத்தில் மருக்கரை சின்னம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    நேற்றிரவு கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான 2½ அடி உயரமுள்ள 2 அம்மன் சிலைகள், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 6 கிராம் தாலியையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    காலையில் கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது பூட்டு உடைத்து கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாலங்காடு போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை, நகை கொள்ளை போன சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×