என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடி அருகே விவசாயி கொலையில் கைதான சிறுவன்
    X

    வாணியம்பாடி அருகே விவசாயி கொலையில் கைதான சிறுவன்

    • சோழன் விவசாய நிலத்திலிருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
    • சோழன் ஆலங்காயம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்ற சோழன் (வயது 62).விவசாயி.

    இவருக்கு நன்னேறி பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (38) என்பவருக்கும் நில பிரச்சனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து சோழன் ஆலங்காயம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை சோழன் விவசாய நிலத்திலிருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மகேந்திரனின் 17 வயது மகன் சோழனை வழிமறித்தார்.அவர் வைத்திருந்த அரிவாளால் சோழனின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டினார்.

    இதில் சோழன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனை தொடர்ந்து சிறுவன் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தான். போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரன் மற்றும் அவரது மகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் ஏற்கனவே கத்தியுடன் டிக் டாக் செய்யும் வீடியோக்கள் தற்போது பரவி வருகிறது.

    சிறுவன் பயங்கரமான வெட்டுக்கத்தி ஒன்றை கையில் வைத்துக் கொண்டு கானா பாடல்களுக்கு டிக் டாக் செய்துள்ளார்.

    அந்த பாடலில் நான் ஆசைப்பட்டு தொங்கவிட்டேன் இடுப்புல.. நான் வெட்டுனா யாரும் பிழைக்கல.. என்ன வெட்ட யாரும் பிறக்கல..நான் சாண பிடிச்சு வைச்சுருக்கேன் கத்திய.. எனக்கு பிடித்தது ரத்த வாசம்.. எனக்கு ஒன்னுனா கத்தி பேசும்.. என்ற வரிகளுக்கு ஏற்ப கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்தபடி கத்தியை சிறுவன் சுழட்டி ஆடி பாடுகிறார்.

    கொலை வழக்கில் கைதான நிலையில் சிறுவனின் டிக் டாக் வீடியோ தற்போது பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×