search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சைக்கு இன்று வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி போராட்டம்
    X

    தஞ்சைக்கு இன்று வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி போராட்டம்

    • இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கவர்னர் செயல்படுவதாக கூறி அவரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்கள் வழங்கினார்.

    முன்னதாக கவர்னர் ஆர்.என். ரவியின் தஞ்சை வருகையை கண்டித்து அவருக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர்.

    அப்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கவர்னர் செயல்படுவதாக கூறி அவரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×