என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்- மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம்
- புதியதாக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி குறித்து அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட உத்திரமேரூர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி குறித்து அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, குழந்தைகள் நலத்திட்ட இயக்குனர் கவிதா, முதன்மை கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.
Next Story






