என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரியில் இருந்து காரில் 1440 மதுபாட்டில் கடத்தல்- 2பேர் கைது
    X

    புதுச்சேரியில் இருந்து காரில் 1440 மதுபாட்டில் கடத்தல்- 2பேர் கைது

    • புதுப்பட்டு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேடந்தாங்கல் சாலையில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பாண்டிச்சேரியில் இருந்து 30 பெட்டிகளில் 1440 பாட்டில்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், அமிர்தபுரம்,கணபதி நகரைச் சேர்ந்த மதிவாணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×