என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்
    X

    அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

    • அம்பத்தூரை அடுத்த கள்ளிகுப்பத்தில் ஜகதாம்பிகை என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.
    • முனுசாமி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிகுப்பத்தில் ஜகதாம்பிகை என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது இந்த இடத்தை அவருடைய மகன் முனுசாமி என்பவர் பராமரித்து வந்தார்.

    சில ஆண்டு காலமாக அந்த இடத்தை முனுசாமி கவனிக்காமல் விட்டுவிட்டார். அந்த இடத்தினை சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் தனது நிலத்தினை பார்ப்பதற்கு முனுசாமி கள்ளிக்குப்பம் சென்றுள்ளார். அந்த இடத்தினை வேறு ஒரு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வந்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் புகாருக்குள்ளான இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு உங்கள் இடத்தினை ஆய்வு மேற்கொண்டு இடத்தை உரியவரிடம் ஒப்படைப்பதற்கு அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக முனுசாமியின் உறவினர்கள் ஒன்றிணைந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தாசில்தார் இடம் யாருடையது என்று விசாரணை மேற்கொண்டு உரியவரிடம் இடத்தை அளந்து ஒப்படைக்கப்படும் என தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் தாலுக்கா அலுவலகம் இரண்டு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×