என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு காலி தட்டு ஏந்தி சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
  X

  வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு காலி தட்டு ஏந்தி சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
  • சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

  திருவள்ளூர்:

  தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

  சிறப்பு அழைப்பாளராக சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் லூர்துசாமி , ஒன்றிய தலைவர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×