என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூர் வடகிழக்கு மண்டல்  பா.ஜனதா தலைவராக  சற்குரு செந்தில்குமார் நியமனம்
    X

    அம்பத்தூர் வடகிழக்கு மண்டல்  பா.ஜனதா தலைவராக  சற்குரு செந்தில்குமார் நியமனம்

    • சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா அம்பத்தூர் வட கிழக்கு மண்டல் தலைவராக சற்குரு பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
    • சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் மு.மனோகரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

    அம்பத்தூர்:

    சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா அம்பத்தூர் வட கிழக்கு மண்டல் தலைவராக சற்குரு பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட பார்வையாளர் ஜி.பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர்கள் தியாக ராஜன், சுப்பிரமணிய ரெட்டியார், சுஜாதா ஜீவன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் மு.மனோகரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அம்பத்தூர் வடகிழக்கு மண்டல் தலைவராக நியமனம் செய்யப்பட்ட சற்குரு பி.செந்தில குமார், மாநிலத் தலைவர், மாநிலத் துணைத்தலைவர், மாவட்ட தலைவர், மாவட்ட பொது செயலாளர்கள் ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

    Next Story
    ×