search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்ரீத் பண்டிகை- புஞ்சை புளியம்பட்டி வார சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
    X

    பக்ரீத் பண்டிகை- புஞ்சை புளியம்பட்டி வார சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
    • இங்கு கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே கோவை மெயின் ரோட்டில் கால்நடை மற்றும் வார சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை கால்நடை சந்தையும் வியாழக்கிழமை வார சந்தையும் நடந்து வருகிறது.

    இந்த சந்தை பெள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தமிழகத்திலேயே 2-வது பெரிய சந்தையாக திகழ்ந்து வருகிறது. இந்த சந்தைக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், கோபி செட்டிபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

    மேலும் கரூர், நாமக்கல், கோவை, திருப்பூர் என பல பகுதிகளில் இருந்தும் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள். இங்கு கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    இதனால் வாரம் தோறும் இங்கு சுமார் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆடு மற்றும் மாடுகள் விற்பனை நடந்து வருகிறது. மேலும் பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். இதனால் ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனை நடக்கும்.

    இந்த நிலையில் வரும் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு குர்பானி கொடுப்பார்கள். இதற்காக அவர்கள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இதையொட்டி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் நடந்த சந்தைக்கு ஏராளமான கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும் விவசாயிகள் பலர் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.

    மேலும் புளியம்பட்டி சந்தைக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    இந்த சந்தையில் ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இங்கு சுமார் ரூ.50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×