search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெட்டேரி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    ரெட்டேரி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரெட்டேரி சந்தையில் கடந்த 2 நாட்களில் ரூ.10 கோடி மதிப்பிலான ரூ.8 ஆயிரம் ஆடுகள் விற்பனை.
    • ஏராளமான வியாபாரிகள் போட்டிபோட்டு ஆடுகளை விற்பனை செய்தனர்.

    கொளத்தூர்:

    ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. மாதவரம் அடுத்த ரெட்டேரி கரையோரம் ஆடு மொத்த விற்பனை சந்தை உள்ளது. சென்னையில், புளியந்தோப்பில் உள்ள பெரிய ஆட்டு தொட்டிக்கு அடுத்தபடியாக ரெட்டேரி சந்தையில் வெளி மாநில ஆடுகள் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன.

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆடுகள் லாரி மூலம் இங்கு கொண்டுவரப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கும் சில்லரை வியாபாரிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3 மணிக்கே சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. ஏராளமான வியாபாரிகள் போட்டிபோட்டு ஆடுகளை விற்பனை செய்தனர். இதனால் ரெட்டேரி ஆட்டுச்சந்தை களைகட்டி காணப்பட்டது.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரெட்டேரி சந்தையில் கடந்த 2 நாட்களில் ரூ.10 கோடி மதிப்பிலான ரூ.8 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தமிழ்நாடு அனைத்து ஆட்டு இறைச்சி சங்கத் தலைவர் யாகூப் சுல்தான் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறும்போது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஆடுகளின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. தமிழ்நாடு எல்லையான ஆரம்பாக்கத்தில் இருந்து ரெட்டேரி வரும் வரை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசாரின் கெடுபிடி சோதனையால் ஆடுகளை ஏற்றிவரும் வெளிமாநில லாரி டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றனர்.

    Next Story
    ×