என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்தில் இருந்து பழைய பஸ்நிலையம் வரை நடந்தது.
- தனியார் பள்ளி முதல்வர் சங்கர நாராயணன், லட்சுமி பிரிபா, ரூபா உள்பட ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு:
பன்னாட்டு லயன் சங்கம் மற்றும் செங்கல்பட்டு பல்லவாலயன் சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்தில் இருந்து பழைய பஸ்நிலையம் வரை நடந்தது.
பள்ளி மாணவ- மாணவிகள், வாகனங்கள் ஓட்டுபவர்கள் தலைகவசம் அணிய வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். செங்கல்பட்டு பல்லவா லயன் சங்க தலைவர் கே.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் லயன் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், முத்து கிருஷ்ணன், மண்டல லயன் சங்க தலைவர் தேவராஜன், வட்டார லயன் சங்க தலைவர் குமார்,சிறப்பு அழைப்பாளர்கள் லயன் கருணாநிதி, லயன் நந்த குமார், லயன் டாக்டர் ஜெயக்குமார், தனியார் பள்ளி முதல்வர் சங்கர நாராயணன், லட்சுமி பிரிபா, ரூபா உள்பட ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.






