search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினம் கடற்கரையில் ஐ.ஐ.எம் அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
    X

    காயல்பட்டினம் கடற்கரையில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்ற போது எடுத்த படம்.

    காயல்பட்டினம் கடற்கரையில் ஐ.ஐ.எம் அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

    • ஐ.ஐ.எம். அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • பள்ளியின் இமாம் நெய்னா முகமது தொழுகையை நடத்தினார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் அல்ஜாமிஉல் அஸ்கர் பெரிய பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் என்கிற ஐ.ஐ.எம். அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளியின் இமாம் நெய்னா முகமது தொழுகையை நடத்தினார்.

    கதீபு அப்துல் மஜீத் மஹ்லரி குத்பா பிரசங்கம் செய்தார். பள்ளிவாசல் தலைவர் அபுல் ஹசன் கலாமி, துணைத் தலைவர்கள் நவாஸ் அகமது, லெப்பை தம்பி, செயலாளர் துணி உமர், துணைச் செயலாளர் கரூர் செய்யது முகமது மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது தொழுகையில் பங்கேற்றவர்கள் பொது நலனுக்காக நிதி வழங்கினர். இதன் மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 157 மற்றும் 1 கிராம் தங்க நாணயம் ஆகியவை கிடைத்துள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    Next Story
    ×