என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை
- அணைப் பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்யாததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லை.
- பிரதான அருவியான மெயினருவியில் இன்று மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதிகளவு கோடை வெயில் அடித்து வருகிறது. இதற்கிடையே வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் வரை கடும் வெயில் வாட்டிய நிலையில் பிற்பகலில் மாவட்டத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 38.6 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதே போல் குண்டாறில் 19.8 மில்லிமீட்டரும், அடவி நயினார் அணைப்பகுதியில் 19 மில்லிமீட்டரும், சிவகிரியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. காலையில் கடும் வெயில் அடித்த நிலையில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
எனினும் அணைப் பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்யாததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லை. பிரதான அருவியான மெயினருவியில் இன்று மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது. இதே போல் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து இல்லை.