என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து: 3 ஆயிரம் கோழிகள் கருகி இறந்தன
    X

    காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து: 3 ஆயிரம் கோழிகள் கருகி இறந்தன

    • முசரவாக்கம் பகுதியில் அவ்வப்போது உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின் அழுத்தம் மாறி மாறி ஏற்பட்டு வருகிறது.
    • தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முத்துவேடு சாலை, கண்ணியம்மன் கோவில் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கோழிப்பண்ணையின் மேற்கூரையில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென கோழிப்பண்ணை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. கோழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் அவை தீயில் கருகி இறந்தன. சுமார் 3 ஆயிரம் கோழிகள் தீயில் சிக்கி இறந்ததாக தெரிகிறது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். கருகி இறந்து கிடந்த கோழிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசியது.

    முசரவாக்கம் பகுதியில் அவ்வப்போது உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின் அழுத்தம் மாறி மாறி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கோழிப்பண்ணையில் தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து குறித்து ராஜேந்திரன் கூறும் போது, உயர் மின்னழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து உள்ளது. தீயில் சிக்கி விற்பனைக்காக அனுப்ப வைக்கப்பட்டிருந்த அனைத்து கோழிகளும் கருகி இறந்து விட்டன. ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×