என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே அம்மன் கோவிலில் கொள்ளை
    X

    பொன்னேரி அருகே அம்மன் கோவிலில் கொள்ளை

    • கடந்த மாதம் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் வழக்கம் போல் நேற்று பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றனர்.
    • பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மெதுர் எடகுப்பம் கிராமத்தில் நூக்கால் அம்மன் கோவில் உள்ளது. கடந்த மாதம் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் வழக்கம் போல் நேற்று பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றனர். இன்று காலை மண்டல பூஜைக்காக பூஜை செய்ய வந்தபோது கோவில் கதவு திறக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது 15 கிலோ எடை கொண்ட பித்தளை கோவில் மணி அலுமினிய சமையல் பாத்திரங்கள் ஆகியவை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். இக்கோவிலில் நான்காவது முறையாக திருடு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×