என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி கூட்டுறவு தொடக்க வங்கி பேரவை கூட்டம் 
    X

    பொன்னேரி கூட்டுறவு தொடக்க வங்கி பேரவை கூட்டம் 

    • தமிழ்நாடு கூட்டுறவு சட்ட விதிகள்படி லாப பங்கீடு செய்ய பேரவை அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • பகலவன், சங்கர், நடராஜன், லோகநாதன், ஈஸ்வரன், ரேணுகா, தமிழரசன், வங்கி ஊழியர் மகேஸ்வரி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் பேரவை கூட்டம் தலைவர் வழக்கறிஞர் ஆர்.பரிமேலழகன் தலைமையில் வங்கியின் துணை தலைவர் பத்மஜா ஜனார்த்தனன் முன்னிலையில் நடந்தது. செயலாளர் யுவராஜ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சாந்தி, பொன்னுதுரை, பகலவன், சங்கர், நடராஜன், லோகநாதன், ஈஸ்வரன், ரேணுகா, தமிழரசன், வங்கி ஊழியர் மகேஸ்வரி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 31.3.2021 முதல் 31.3.2022 -ம் ஆண்டு வரையிலான நிர்வாக அறிக்கையினை வாசித்து பேரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல், 2022-2023-ம் நிதி ஆண்டிற்கான செலவினங்களை அங்கீகரிப்பது, 2020-2021, 2021-2022 ஆகிய வருடங்களின் நிகர லாபத் தொகையினை தமிழ்நாடு கூட்டுறவு சட்ட விதிகள்படி லாப பங்கீடு செய்ய பேரவை அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×