என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி பகுதியில் வாகனங்கள் தொடர்ந்து திருட்டு
    X

    பொன்னேரி பகுதியில் வாகனங்கள் தொடர்ந்து திருட்டு

    • பொன்னேரி பகுதியில் தொடர்ந்து வாகனங்கள் திருடு போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    • போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரியில் உள்ள புதிய பஸ் நிலையம் அருகில் மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வருபவர் தினகரன். இவரது கடையில் ஆவூரை சேர்ந்த நீலா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் கடைமுன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர் அதனை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதேபோல் அதேபகுதியில் உள்ள காய்கறி கடையின் முன்பு நிறுத்தி இருந்த வேலு என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொன்னேரி பகுதியில் தொடர்ந்து வாகனங்கள் திருடு போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    Next Story
    ×